Sunday, November 23, 2008

மாறாத மாற்றங்கள்
















மாறாத மாற்றங்களுள்

சலமில்லா இரவும்


தவிப்புக்களுக்கு


முற்றுப்புள்ளி ஏதும்


இடாமல் செல்கிறது...


புதுவொரு எதிர்பார்ப்போடு


எழுகிறேன்...


முழுமை பெறாத


நேற்றைய குறைகளுடன்


தோற்குமோ? இன்றைய


காலையும் என்ற


சிந்தனை நீழ்ச்சியில்...

இறைந்து கேட்கிறேன்


கரைந்து போனது
இரவு...
விரைந்து வந்தது
விடியல்...
மறைந்து அழிகிற
பனித்துளிகள் போல்...
நட்பின் துன்பங்கள்
ஒழிந்து போக...
இறைந்து கேட்கிறேன்
இறைவனை...

தகர்த்திடு

கருவிலும் சொல்லவில்லை
உருவிலும் மாற்றமில்லை
அறிவிலும் குறையில்லை
தலையிலும் எழுதவில்லை
பிறப்பால் மனிதர்தான் ....எங்கு?
(நிறப்)பால் கண்டாய்
மனிதா?

மனிதன் மேம்பட
வகுத்தான் பிரிவை
முன்னோன்....
பின்னோன் பிரித்திழித்து
பிதற்றுகிறான்- நான்
மேலோன்- நீ
கிழோன் என......

வெட்டினால்
கொட்டும் இரத்தம்
மட்டும் சிவப்பு...பின்னேன்?
மனிதரில் உமக்கு
வகுப்பு!

அறிவில் ஆறு
வடிவில் மிக்கழகு
குணத்தில் கனிவு
பண்பில் அன்பு
நடையில் பீடு- அவன்
கொடையில் வள்ளல்- யாவரும்
பாடையில் ஈறாக
பேடை உனக்கேன்
ஜாடை!

பிறர்
துன்பியல் கண்டால்
துடித்திடும் மனது
வம்பியல் தெரியாது
நம்பி வந்தோர்
நலன் காக்கும்
நற்றியில் தெரியும்
சுற்ற இருப்போரை
பெற்றவர் போல்
பேணிக் காத்திடும்
இவ்வியல் கண்டால்
ஏற்றிப்போற்றிடு
இவனே மேலோன்
எழுந்திடும் மனிதம்
இகத்தே எந்நாளும்!

விடியல்

இருள் துடைத்து
ஒளி அருளும்
புவி மேவிய
ரகு வீரா - நட்பின்
துயர் விலக்கி
திறன் துலக்கு
குலம் விளங்க
வளம் வழங்கு
கொட்டும் முரசு
எட்டும் திசையாவும்
இனிதே உன்
புகழ்பாடி!

அன்னை

சுவர் சூழ்ந்த
இருண்ட கருவறையின்
இருளுக்குள் - நீ
தோன்றினாய்
இரவென்ன
பகலென்ன
உனக்கென்ன தெரியும்
அறிவாய் ஒன்று
இருள் மட்டும் தானே...

நீ வாழ
தான் உண்டு
தந்தாள்
தனக்குள் இருக்கும்
உந்தனக்கு
அதை உண்டு
அதற்குள் வடிவானாய்
அழகுடை உருவானாய்
பெரும் இடம்
கேட்டாய்
பொறுத்துக் கொண்டு
இடம் தந்தால்
கழிப்புற்ற நீயும்...
ஓங்கி உதைத்து
அன்னையின் உடலை
வருத்தும்
குறும்புகள்
பல செய்தாய்....
அதையும் குறம்புடன்
தாங்கி தடவிக்
கொடுத்தாள் உன்
அன்னை!

இவ்வாறு
ஈரைந்து திங்கள்
இனி்தே உனைச்
சுமந்து
பார்போற்ற
நீ வாழ
புதுவுலகம்
காட்டிய உன்
அன்னையே!!!!
நீ
கும்பிட வேண்டிய
முதற் தெய்வம்
போக வேண்டிய
பெரும் கோயில்!


கேள்விக் கணைகள்

நகரும் நாட்கள்
மெளனிக்கும் நிஜங்கள்
தொடரும் வேதனைகள்
?க்கு விடைகள் -இராவின்
விடியலில் மொய்க்கின்றன..
நிம்மதி ஒன்று...
சொல்லும்..இனிய காலை வணக்கங்கள்...

என் காதலி











வைகறைப் பொழுதில்
வானவில் வளைவில்
உன் வதன
நெற்றியின்
நெளிவு நிதம்
கண்டு
உளம் கனிந்து
உவகையுற்றேன்!

வில் நிறம்
தனில்
கண்ணின் கரு
வட்ட வடிவு
கண்டு
என்னை ஈர்க்கும்
இயைவை
எண்ணி ஏங்கி
நின்றேன்!

சாளரவோரம் நின்று
விண்நோக்கி
வெண் மேக
மெல்லிய
நல்லாடையணிந்த
தண்மதியின்
மெல்லிடை கண்டு
உன்னிடையின்
செந்நிறம்தனை
நினைந்து
உறைந்து
உருகினேன்
என் தோழி....