Wednesday, November 26, 2008

ஞாயிறின் ஞாயிறே

கண்மலர்ந்து நீயும்
விண்ணுயுயர உயர
மண்ணிலுளோர்
(இடு)கண் அ(யர)ற
வெடுக்கன வருவாய்
(நடு) நன் நாயகனாய்
தொடுவானில் மிடுக்குடன்
ஞாயிறின் ஞாயிறே...

இரவின் புறப்பாடு

இரவிரவாய்
அலைமோதும் மனதின்
திறானாய்வுக்காக
காலையின் புறப்பாடு...

அளவற்ற அன்பின்
ஆழ்மன வெளிப்பாடாய்
நட்பின் பரிபாசையாய்
மெளன மொழிகளின்
பரிமாற்றங்கள்
பனி்ச்சாரலாக
உணர்வொடு உதிரும்
வார்த்தைகளாக
காலை மாலை
மதிய வணக்கங்கள்

வெட்கத்தில் நிலா

ஆடையில்லா நிலா
விண்மீன்கள் சிமிட்டின
கண்களை..
வெட்கத்தில் நிலா
முகம் சாய்த்தது...
வெண்மேகம் தன்
ஆடைகொண்டு
போர்த்திக்கொண்டது..

கன்னக்குழி

உன் கன்னத்தில்
குழி மட்டும் அல்ல
நானும் விழுந்துவிட்டேன்
எழ முடியவில்லை
எழுந்தால் நானும்
முடிந்து விடுவேன்

மழலை


பச்சிளம் குழந்தையின்
பல்லே இல்லாத
பவளவாய்ச் சிரிப்பு
பகட்டாய் இருக்கும்
பண்ணிசையும்
ஒருபடி குறைவுதான்
அதற்கு...

பார்ப்போர் மனதில்
பால் வார்க்கும்
விண் மீன்களும்
மெல்லென சிரித்து
நல்லொழி காட்டும்...

வெண்ணிலா
தன்னொழி மறந்த
இவ்வொளிதனில்
இனிதே
இரசனை கொள்ளும்...

கூவிடும் குயில்கள் - தன்
குரலை அமுக்கி
ஒரு கணம்
சிரிக்கும் குழந்தையின்
சிங்காரவொலியை
ஒளிந்து கேட்கம்...

பால் பொங்கும்
பசும் பொன்
முகம் கண்டு
பசியால் துடித்திடும்
மானிடர்
தன்னிலை மறந்து
இந்நிலைதனில்
இசைந்து கொள்வர்...

கிள்ளையென சிறு
பிள்ளை
துள்ளி விளையாடும்
கொள்ளை அழகு
கோடி கொடுத்தும்
தேடி வராது
உமக்கு!