Sunday, January 4, 2009

(மா) மரம்

நான் ஒரு
மா மரம்
என் இளமையில்
நான் பட்ட
சில கஸ்டங்களை
சொல்கின்றேன்...

உண்ண உணவின்றி
உறிஞ்ச நீரின்றி
வெந்தணல்
வெப்பத்தில்
அவியாய் அவிந்து
நொந்து வெந்து
நூலாகி சுருங்கி
உக்கி நின்றேன்...

பார்ப்பார் எவரும்
இன்றி இன்னலே
வாழ்வாகி வாடி
வதங்கி வடிவிழந்து
கூனிக்குறுகி
நின்றேன்...

என்முன்னே
நிற்கும்
மற்றவர்களுக்கு
எல்லாம் கிடைத்தன
என்தாயும் என்ன
செய்வாள்
அவளும் சோர்வுற்று
போனாள்
ஏனெனில் நாம்
காய்க்காத
பலனின்றிய
மரங்களானதால்
பார்ப்போர்
எவரும் இல்லை
நிழலுக்கும் என்னருகே
ஒதுங்க எவரும்
வரவில்லை
ஏன் என்று
உங்களுக்கு புரியும்
இலைகள்தான்
என்னில் இல்லையே...

வேதனையையும் சோதனையையும்
நினைத்து வெந்தேன்
இருந்தும் என்
மனவுறுதி தளரவில்லை
என்றொரு ஒருநாள்
நாம் வெற்றி
வாகை சூடலாம்
என்ற நம்பிக்கையுடன்
இருந்தேன்...

இறைவன் கருணையால்
சின்ன மழை
ஒன்று பெய்தது
அதனை எனக்கான
வாய்ப்பாய் எண்ணி
விடாமுயற்சியுடன்
அதனை வைத்தே
எனக்கு உருக்கொடுக்கலானேன்
நம்பிக்கை வீண்போகவில்லை
சிறுதுளீர் பெருதுளீர்
என இலைகளை
படைத்தேன்
இம்சற்று நாட்களில்
பச்சைப்பசேல் என்று
உருவெடுத்தேன்
மெல்ல மெல்ல
காய்க்கவும் தொடங்கினேன்
தொடர்ந்து எடுத்த முயற்சியால்
காய் பழம்
என என்னை
மறைத்து பொலிவாய்
மிளிர்கின்றேன்....

எனக்கு இப்போது
தேவைகள் ஒன்றும்
இல்லை
எதிர்பார்த்த நேரம்
தேவைகளின்
அவசியப்பாடு இருந்தன

ஆனால்....
என்னை பராமரிக்க
ஓடி ஓடி
வருகின்றார்கள்
இந்த மனிதர்கள்
நிழலுக்காக என்னருகே
ஒதுங்கி ஏதோ
ஏதோ வம்பு
வாய்ச்சண்டைகள்
புரிகின்றார்கள்
மாறி மாறி
கவனிக்கின்றார்கள்...

என்னால் தனித்து
இயங்க முடியும்
சுயலாபத்திற்காக
நான் வேண்டாத
உதவிகள் அனைத்தையம்
செய்கின்றார்கள்
எல்லாம் என்னில்
இருந்து பெறுகின்ற
நன்மைக்கான
பாசாங்கு
நாடகம்தானே
குறைவான அறிவு
கொண்ட எனக்கே
இவ்வளவு புரிகின்றது
என்றால்...
ஆறறிவு கொண்ட
இம்மனிதர்களுக்கு
எவ்வளவு புரியும்...

பலன்கருதி
சேவை செய்யும்
மானிடப்பயல்களை
ஏன் படைத்தான்
இறைவன்...

இவர்களிடம் நாம்
கற்றுக்கொள்ள வேண்டியது
என்ன இருக்கின்றது
வஞ்சகம்தான்...

No comments: