Monday, July 27, 2009

வர்ணிக்க வார்த்தைகள் இல்ல











வானவில் இரண்டை
நேரெதிர் என
இணைத்திட்டது போல்
இதழவள் கொண்டாள்?
எப்படி செதுக்கினான்
இச்செவ்விதழை
கற்சிலை கொண்டா
இருக்காது அதற்கு
மென்மையில்லவே இல்லை
எங்கிருந்து பெற்றான்
இதற்கான கலவையை
பிரம்மதேவன்
ஒரு வேளை
மலர்களின் கலவையோ?
அவ்விதழின்
வளைவுசுழிவை
எங்கு கற்றான்
நான்முகன்
சில வேளை
நதிகளிலிருந்தோ?
இருக்கலாம்!
வளர்பிறை இரண்டை
எப்படி பொருத்தினான்
ஓரிடத்தில்?
விண்மீன்களிடம்
சொட்டு சொட்டாய்
கடன்வாங்கி
கடைந்தெடுத்தபோது
வந்ததோ இவளது
உதட்டின் நிறம்!
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
கொவ்வை அவள்
செவ்வையிதழ் சொல்ல....

4 comments:

Anonymous said...

superb ilatchiyan ....... keep it up

Anonymous said...

superb ilatchiyan keep it up...... akshayah sarma ..

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

உன்னவள் செவ்விதழ்
வர்ணிக்க உனக்கு
வார்த்தைகள் இல்லாததை போல்;
உன் கவியை வர்ணிக்க
வார்த்தைகள் தேடிவிட்டேன், தேடிக்கொண்டிருக்கின்றேன்,
எனக்கும் கிடைத்தபாடில்லை!
உன் கவியை வர்ணிக்க
பிரபஞ்சத்தில் வார்த்தைகள் இல்லை
இருந்தும் ஏதாவது சொல்லியே ஆகவேண்டும்
என முயற்சி செய்து சொல்லுகின்றேன்
நெஞ்சத்தை தொட்டு விட்டன
உன் வரிகள்;
உன் கவிகள்!

என்ற போதும் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றேன் வார்த்தைகளை
உன் கவியை வர்ணிப்பதற்காக!

அற்புதம் நண்பா

க.இலட்சியன் said...

அக்ஷ்யா, கீர்த்தி உங்க பாராட்டுக்கள் எனக்கு உருத்தாகட்டும் இன்னும் எழுதத்தூண்டட்டும்......கீர்த்தி என்னை பாராட்டி கவி வரைந்தமைக்கு நன்றி