Saturday, August 1, 2009

நட்"பூ"


பூமிகொண்ட
பூக்கள் கோடி
புனிதமிகு
பூக்கள் பல
காலைதோன்றி
"மாலை"யாய்
மடியும் காண்
சிற்சில
மாலைவந்து
காலையிலே வாடி வதங்கி விடும்॥
வருடங்கள் கழிந்தும்
வாடாதிது
அழ"கு"ன்றாக
அழிவுறாதிது
யுகங்கள் கடந்தும்
கடக்குமிது
காவியமாய்
அதுவே
நல் நட்"பூ"


1 comment:

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

பூக்களை விட சிறந்தப் பூ நட்பூ என அழகான வரிகளில் அழகாக சொல்லி இருக்கின்றீர் இலட்சியன்

வாழ்த்துக்கள்