Tuesday, August 18, 2009

பணத்தின் வெம்மையில் கருகிய காதல்

காதல் யாரைத்தான்
விட்டு வைத்தது
ஒவ்வொரு மனங்களிலும்
காதல் காற்று
லேசாய் தொட்டு
செல்ல மறுப்பதில்லை
அதனை பற்றிக்கொள்ளும்
மனங்களும் உண்டு
போனால் போகட்டும் போ என்று
விட்டுச் செல்லும் உள்ளங்களும் உண்டு!


கீதன், நிதா
என்கிற இரு உள்ளங்களை
தன்விரிந்த போர்வையால்
போர்த்திக்கொண்டு
விலக விடாமல்
மூடிக்கொள்கிறது காதல்
எல்லையில்லா காதல் வானிடை
இறக்கையின்றி பறக்கும்
அதிசயப் பறவைகளானார்கள்

நகமும் சதையும் போல
ஒருவரை ஒருவர்
இணைபிரியாது
இவர்கள் காதலில் மூழ்கினார்கள்
அதனால்
இடைவிடாது
தொடர்கிறது
காதல் யாத்திரை
கரடு முரடுகள்
மேடுபள்ளம்
வீதியிலும் வீதியோரத்திலும்
நதியிலும் நதியோரத்திலும்
எங்கும் செல்வோம்
எதிலும் நம்காதல் சொல்வோம்
என்று தொடர்ந்து
பயணிக்கிறது இவர்கள் காதல்பயணம்.


பரந்து விரிந்த
காதல் கடலிடை
நீச்சலடிக்கும்
ஜோடி மீன்களாய்
கீதனும், நிதாவும்

ஆனால்
இவர்கள்
குடும்பப்பின்னணி
வேறு விதமாக
அமைகிறது
அங்குதான் ஏற்றத்தாழ்வுகள்
புரையோடுகின்றன...
வெவ்வேறு
கோடுகளில்
அவர்கள் குடும்ப
சக்கரங்கள் சுழன்று
செல்கின்றன
பணத்தின் மேல்
படுக்கும் அளவிற்கு
கீதன் வாழ்கின்றான்
அன்றாடம் காச்சியாய்
இருக்கின்றாள்
நிதா

கீதன் நிதா
காதல் கதை
அவரவர்
குடும்ப முகவரியை
எட்ட
துள்ளிக்குதிக்கின்றார்
கனவான்
கீதனின் தகப்பன்


ஒரு வேளைக்
கஞ்சிக்கே வழியில்லா
பிச்சைக்கார......
என்று
இஞ்ஞனம்
பணத்திமிர்
வார்த்தைகளை
அள்ளி வீசுகிறது

நீ அவளை
இனி பார்க்க
போனாய் என்றால்
உனக்கு இங்கு
இனி இடமில்லை என்றும்

அதுமட்டுமன்றி
எங்களை உயிருடன்
பார்க்க முடியாது என்றும்
கடினமான பூட்டால்
அவனது காதல் கதவை
பூட்டி விட
செய்வதறியாது தவிர்க்கின்றான்.

பெற்றோர் மீது
கொண்ட பற்று எனும்
நெருப்பால் இவன் காதல்
எரிந்தது.
சீக்கிரமே
பணத்தால் உயர்ந்த
பெண்ணுக்கு இவன்
மாலையிடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

ஏழையின் வயிற்றில்
உதித்தது தப்பா ?
பணக்காரனை காதலித்தது தப்பா?
நிதா வேதனையில்
நொந்து வெந்து
நூலாகிறாள்
நீரில்லா குளத்தில்
நீச்சலடிக்க முனைந்த மீனாய்
இவள் கதை இவ்வாறு...

பணத்தின் வெம்மையில்
கருகிய காதலாய்
இவர்கள் காதல்
மாறியது!

2 comments:

ManA © said...

பணத்தின் வெம்மையில்
கருகிய காதலாய்
இவர்கள் காதல்
மாறியது!

கலக்கிட்ட மச்சி!
வாழ்துக்கள்!

க.இலட்சியன் said...

நன்றி மச்சி

றொம்ப நன்றி