Monday, August 3, 2009

உன்வருகையை எதிர்பார்த்து!

பெண்ணே!
உனக்காக
இறைவனை
பிராத்திக்க முடியாதுள்ளது
ஏனெனில்
என்மனத்தை நீ
சிறைப்பிடித்துவிட்டாய்
மனம் இல்லாமல்
எப்படி இறைவனை
பிராத்திப்பேன்...

கண்ணே!
கடவுளைப் பூசிக்க
பூக்கள் இல்லை
என்னிடம்...
எல்லாப்பூக்களையும்
நீ வரும் பாதையில்
தூவி விடுவதால்...

என்னவளே!
மூளைக்கு தகவல்
வழங்கியான மூளியின்
கட்டளையை
கால்கள் ஏற்க மறுக்கின்றன
ஏனெனில்
உன்னை நோக்கி
வருவது என்கால்களுக்கு
பழக்கமாகிவிட்டதால்...

பெண்ணே!
இரவில்
எனக்குப் பக்கத்தில்
உனக்காய் ஒரு
படுக்கையை விரிக்கிறேன்
பூக்களால்.
கனவில் நீ வருவாய்
என்ற
நம்பிக்கையில்.....


எல்லோரும்
உறங்கிய பின்
எனக்கும் நிலவுக்கு
நிழல் யுத்தம் நடக்கிறது
என்னவளிடம்
எனக்காய்
தூது செல்ல
நிலா மறுப்பதால்...


அன்போடு அம்மாவின்
அழைப்பு
ஆத்திரத்தில்
எரிந்தவிடுகிறேன்
உன்னைப்பற்றிய
சிந்தனையை
சிதறடித்ததற்காக...

என் இதயத்துள்
கோயில் ஒன்று
கும்பாபிஷேகத்திற்கு
தயாராக...
நீதான் கடவுள்
உன்வருகையை
எதிர்பார்த்து நான்....


4 comments:

ManA © said...

ம் வாழ்துக்கள் மச்சி! !

க.இலட்சியன் said...

thank u da machchi

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

அன்பனே!
உன் மனதை சிறைப்பிடித்த
மனதின் நிலை அறிவாயா நீ?
என் உணர்வுகளைக் கூட
விட்டு வைக்கவில்லை - உன்
நினைவுகள்!

உன் அசைவுகள் அனைத்தையும்
கட்டளைகளாக்கி
நடையிடுகின்றது என் உயிர்
உன்னோடான நாளைய
நாட்களை நோக்கி!

உன் அழைப்போசை
கேளாத ஜடமல்ல நான்
என்னுள் உறைந்த உன் நினைவை
உன் ஸ்பரிடம் கூட
விளக்கிட வேண்டாமென தான்
கண்டனம் கட்டிக்கொண்டு
திரிகின்றது என் நடத்தை!

நான் வரும் வழி நோக்கி
பூக்களை தூவும் நீ
புன்னகைக்க மறுப்பதேன்
உன் புன்னகையை விடவா
பூக்கள் எனைக் கவர்ந்து விட்டன?

எனை நோக்கி வரும்
அவசரத்தில் நீ - உன்
கால்தடப் பதிப்பை தனக்குள்
பதிப்பதற்காய் வழி தோரும் - என் இதயம் காத்திருப்பதை
காணாமல் விரைவதேனோ?

எனக்காக துயில் கொள்ள
உன்னருகில் படுக்கையை
விரித்து எனை வேறாய்
பார்க்கும் நீ....
உனக்குள் வாழும்
எனை காணாமல்
விட்டது தவிப்பை தருகின்றது!

எல்லோரும் உறங்கிய பின்
எனக்காக நிலவோடு நிழல் யுத்தம்
செய்யும் நீ - உன் இதயத்தின்
ஒரு இடத்தில் கூட எனைத்
தேடாதது தவிப்பைத் தருகின்றது!

அன்போடு உன் அம்மாவின்
அழைப்பை கேட்டு
ஆத்திரத்தில் எரிந்துவிழும் நீ
உன் ஆத்திரத்தின் ஆதியாய்
வீட்டிருப்பதும் நானென
அறிய மறந்ததேன்...?

உன் இதயக் கோவிலில்
கும்பாபிஷேகத்திற்கு எனை
அழைக்கும் நீ.. - உனக்குள்
புதைந்தே போய்விட்ட என்னை
புதிதாய் வெளியில் தேடுவதில்
நியாயமென்ன?


உங்கள் கவிதை அருமையா இருக்கு! ஏதோ என்னால் முடிந்த சில வரிகள்
உங்களுக்காக

க.இலட்சியன் said...

உங்களால முடிந்த வரிகள் என்று எவ்வளவு அழகா வரிகளை விளாசி இருக்கின்றீர்கள் ....மிக மிக அழகான வார்த்தைகளை வடித்திருக்கிங்க ....நன்றி தோழி நன்றி ...உங்க கவிக்கு உங்க கவியே நிகர் !