Sunday, December 6, 2009

விழியழகு....


நீள் வளையம்
அங்கங்கே வளைவு சுழிவு
அமைந்து அழகு கொடுக்கும்
அந்தக் கண்களுக்கு மட்டும்
அந்த பிரம்மன்
அச்சு வடிக்க
எத்தனை கலவை சேர்த்தான்
என்று எண்ணிப்பார்க்கவே
திகிலடைகிறது என்கண்கள் ...
நேர்த்தியுடன்
பூர்த்தியாய் பார்க்க
புண்ணியம் செய்திருக்கணும் கண்கள்...

ஒருதரம் அவை
சுற்றுகையில்
மயிலிரெண்டு தோகை
விரித்தாடுவதுபோல்
விழிகள் விரிய
அவற்றின் தோற்றம்
அழகுற தோன்றும் ...

காந்தத்திலும் ஒவ்வா ஏற்றமுண்டு
இந்த காந்த கண்களில்
இரு ஏற்றங்களும்
ஈர்க்கும் ஏற்றங்களாக,
பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும்
பார்வைகள் வர.
என்ன வித்தைகள் செய்து
இவை வார்க்கப்பட்டன
என்று எண்ணத்தோன்றுகிறது...

இவ்விழியழகை
பார்த்திட மட்டுமே
விடியும் பல
பகல்கள் வேண்டும்
அந்தகண்களோடு
இனிய கனவுகள்
எளிதாய் வந்திட
அமைதியான
இரவுகள் வேண்டும்...


வாழ்க்கை ஒரு
வட்டம் என்றும்
வாழ்ந்து முடித்த
சுகமதையும்
கண்ணின் கருவட்டவடிவம்
உணர்த்தியழகை
வார்த்தையில் வடிக்க
கிடைக்காது நேரம் ...

எண்ணிலடங்கா கண்கள்
கண்டேன்
அவை எண்ணிக்கையில்
விண்ணை முட்டும்
பெண்ணினிவள் கண்களுக்கு
ஈடாக இன்னும்
இரு விழிகள் கண்டிலேன்....

முற்றும்!

பிற்குறிப்பு:- கொஞ்சம் over தான்
என்ன பண்ற adjust பண்ணுங்க friends.
எனக்கு தேவை கவிதை உமக்கு தேவை ரசனை.

By.
K.Eலட்சியன்.

2 comments:

Vijay said...

//இவ்விழியழகை பார்த்திட மட்டுமே
விடியும் பல பகல்கள் வேண்டும்
அந்தகண்களோடு இனிய கனவுகள்
எளிதாய் வந்திட அமைதியான
இரவுகள் வேண்டும்...//

உன் கவியழகு அது கூறும் விழியழகு

ManA © said...

உன் கவியழகு ,
niceda machchi.:D