ஒளிர்வாய் புகழாய்
Free Graphics - MySpace/Xanga/Friendster தொல்லைகள் அகல
நல்லவை நீள
வல்லவை செய்க
உள்ளவை உணர்
உண்மையில் நில்
மெல்லென அமைதியுறு
வையென வை உன்னில்
நம்பிக்கை வை
செய்யென செய்
செயற்கரிய செயல் செய்
புல்லென இருக்காதே
வில்லென வளை
வில்லனை ஒளி
வெல்லென வெல்
பகையது வெல்
வரும் தடை அகற்று
வரும் ஆண்டை
செயலால் செப்பனிடு
ஒளிர்வாய் புகழாய்
ஒளிர்வாய்.
2 comments:
///புல்லென இருக்காதே///
சும்மா இருந்தா புல்ல என் வம்புக்கு இழுக்குறீங்க? பாவம் பாருங்க அது எப்பிடி விக்கி விக்கி அழுகுதுன்னு,,,,
அருமையான ,,,அழகான கவிதை,,,(மெய்யாலுமேதாங்க) இன்னும் நிறைய எழுதுங்கள்....
நன்றி நண்பா ...இன்னும் எழுதுகிறேன்:)
Post a Comment