Monday, July 27, 2009

வர்ணிக்க வார்த்தைகள் இல்ல











வானவில் இரண்டை
நேரெதிர் என
இணைத்திட்டது போல்
இதழவள் கொண்டாள்?
எப்படி செதுக்கினான்
இச்செவ்விதழை
கற்சிலை கொண்டா
இருக்காது அதற்கு
மென்மையில்லவே இல்லை
எங்கிருந்து பெற்றான்
இதற்கான கலவையை
பிரம்மதேவன்
ஒரு வேளை
மலர்களின் கலவையோ?
அவ்விதழின்
வளைவுசுழிவை
எங்கு கற்றான்
நான்முகன்
சில வேளை
நதிகளிலிருந்தோ?
இருக்கலாம்!
வளர்பிறை இரண்டை
எப்படி பொருத்தினான்
ஓரிடத்தில்?
விண்மீன்களிடம்
சொட்டு சொட்டாய்
கடன்வாங்கி
கடைந்தெடுத்தபோது
வந்ததோ இவளது
உதட்டின் நிறம்!
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
கொவ்வை அவள்
செவ்வையிதழ் சொல்ல....

குளிர வைக்கும் "தண்" ணீராய்

சருகாய்க் கூட
இலையின்றி
காய்ந்த மரமாய்
நின்றவேளை
என்னில்
மழையாய் பொழிந்தாய்

தரிசு நிலமாய்
நான் நாட்களை
கடத்திய வேளை
றோஜா செடியாய்
என்னில் மலர்ந்தாய்

சின்னச்சின்னதாய் உள்ள
விண்மீன்கள் நடுவே
வந்துதித்த நிலாத்தேவையடி நீ

உறக்கம் இழந்து
உறங்க மனமின்றி இருந்தேன்
உன் வருகைக்காக
உறங்குகிறேன்
கனவில் நீ வருவாய் என।

வரண்ட பூமியதில்
தாகத்தின்
கொடுமையில்
கானல் நீரை நம்பி
ஏமாந்து ஏமாந்து
இருந்த வேளை
என்னருகே மெல்லென
பாய்ந்து செல்கின்ற
நதியாய் வந்தாய்!

இப்போ நீ எங்கோ
நானெங்கோ
இருந்தும்
கொடுந்தளீர் நெருப்பின்
அணைத்து
நடுவேயென்னை
குளீர வைக்கும்
தண்ணீராய் நிந்தன்
நினைவுகள் நிழலாய் தொடர்கின்றன,,,.