Monday, August 10, 2009

பனிச் சாரல் கொண்டு - உன்முகம் துடைப்பேன்....

பனிச் சாரல் கொண்டு - உன்
முகம் துடைப்பேன்
மழைத்தூறலில் மஞ்சள் கரைத்து
உனை நீராட்டுவேன்!

பூக்களின் மகரந்தம் அரைத்து
உன்னில் பூசி
நறுமணமாக்குவேன்!

வெண்பாக்கள் தொடுத்து
உன்பால் கவிபுனைவேன்
செந்தமிழ் சிலவெடுத்து - உன்
செந்நிற அழகை
செதுக்கிடுவேன் வரிகளில்!

கம்பளமாக விரியும்
பச்சைப்புல்வெளியில்
உனக்கெனவும் எனக்கெனவும்
மலர்களாலான பாயொன்று விரித்திட்டு
அங்கே உட்கார்ந்து இருவரும்
அண்ணார்ந்து ஆகாய நிலவை
சாட்சியாய் வைத்து
காதல் சல்லாபம் புரிவோம்
விண்மீன்கள் வெட்கத்தில
ஒருகண் மறைத்து
ஓரக்கண்ணால் எமைப்பார்த்து
பவ்விய சிரிப்பு சிரிக்கட்டும்!

ஓவியர் பலரை அழைத்து
உன்னழகை நான்சொல்
வரைந்திட நிறச்சேர்க்கைக்கு
வானவில்லை வரவழைப்பேன்....

கவிவல்லோரை அழைத்து
காவியம் படைத்திட
மானியமாய் அவர்களுக்கு
தானியம்போல் தங்கம் கொடுப்பேன்!

தொடரும்.......

என்சிந்தனையில் ஏற்பட்ட தடங்களுக்கு வருந்துகிறேன் யாவும் கற்பனை.