Wednesday, August 19, 2009

சந்தேகம்

உலகிலாயிரம் கோடி
வாயில்வரா
நோய்கள் பல
இருந்தும் இதுவொன்றும்
புது நோயல்ல
எவரிடமும் எளிதில்
ஊடுருவி தாக்கவல்ல
தொற்றுக்கிருமி
சத்தம் இல்லாமல்
உள்ளே இருந்து
உயிரை உறிஞ்சும்
உயிர் கொல்லி

வறுமையிலும்
வாழலாம்
சிறுமையுள்ளும்
சீர்தூக்கலாம்
ஏன் எனில்
நிம்மதி அங்கிருக்கு
நிம்மதி கெடுத்து
அமைதி குலைத்து
அழிய வைக்கும்
சந்தேகம் வராவிட்டால்.

கணவன் மனைவி
மீது பாய
மனைவி கணவன்
மீது பாய
தூண்டி தூண்டி
மனக்கிளர்ச்சிகளை
உண்டுபண்ணி
ஈற்றில்
நீதிமன்ற வாசல்படி
ஏறவைத்து
இருவரையும்
எல்லோரும் இவர்களை
எள்ளி நகையாடி
வாயில் வருவது
பேச வைக்கிறது.

சந்தேகம் யாரையும்
விட்டு வைப்பதில்லை
தெய்வத்தை கூட
ராம பிரான்
உலகம் தப்பாய்
கதைக்கும் என
சீதா பிராட்டியில்
சந்தேகப்பட்டார்
பிராட்டியையும் இழந்தார்!

சந்தோசம் காண
சந்தேகம் விலக்கி
சந்ததி போற்ற
வாழ்வு மானிடமே"


By
K.ஜயதீசன்(இலட்சியன்)