Sunday, April 4, 2010

சாதனை நோக்கி நான் .........


நானறிய
ஏதும் தீதை
எவருக்கும் செய்ததில்லை
ஏன் எனக்கும் மட்டும் இப்படி ...
வாழ்வின் நல்
பாதையை தீர்மானிக்க
நினைக்கையில்
போதை ஏறியது போல
காலம் ஏன் எனை
காலைவாரி
காட்டிடை எறியவேண்டும் ?
தூர விழுந்தேன்
துணிவாய் காலடி வைத்தேன்
அங்கும் முரடாய் எல்லாம்
பரவாயில்லை என நடக்க
அழுக்காய் போனதே
அவ்வழியும் ...
இருந்தும் தூரே தெரிந்த
வெளிச்சத்தின் கீற்றில்
புதிதாய் ஒரு தேசம்
நோக்கி நேரே வந்து
நெடுநாட்களாகிவிட்டன...
காலம் தூக்கி
எறிந்துவிட்டதென்னை
இளமைக்கால அனுபவத்தை
இனிதாய் நுகரவிடவில்லை ...
அன்பையும் அரவணைப்பையும்
தூரத்தே வைத்து
முரட்டுக்கரங்களுக்குள்
இறுக்கிப்பிடித்து நான்
உறும் வேதனையை
காலச்சாணக்கியன் வேடிக்கை
பார்க்க வைக்கிறான்
விகடமாய் பல்லிளிக்கிறான் ...

அன்பும் அதில் கலந்த அணைப்பும்
பெறுவதில் பாடாய் போய்விட்டது!
இதை பெறுவதே
எனக்குள் நான் உருவாக்கிய
சாதனைப்புத்தகத்தில் புகுத்த
நினைக்கும் சாதனை ...
அச்சாதனை நோக்கி நான் ...................

க.ஜயதீ(இலட்சியன்)