நீ ஒரு நிறம்..நான் ஒரு நிறம்..உனக்கொரு தாய்..எனக்கொரு தாய்..நானும் நீயும்எங்கெங்கோபிறந்தோம்...ஆனால் நட்பின்பாதையில்இணைந்திட்டோம்॥இனியென்ன நட்பேஎனக்கும் உனக்கும்உரிய பாதைஒரு தன்னலமற்ற பாதையாய் தொடர்வோம் நம் பயணம்...

என் இதயத்தை
குத்தி கூறுபோடுகிறது
காதல்...
என் காதலே
என்னுயிர் தின்னும்
கொலைஞன் ஆனது
இதயம் சிதறி
துளித்துளியாய்
சொட்டும் ரத்தத்தில்
இருக்கும் ஒவ்வொரு
அணுக்களும் உன்
பெயர் சொல்லுமடி ...
மலை முகட்டின்உச்சியில் இருந்துதடைகள் தாண்டிவளைவு சுழிவுகள் எனகட்டுப்படுத் முடியாமல்ஒடி வரும்ஒரு அருவியாய்நான்எனக்காய் காத்திருக்கும்கடலாய் நீ...என்னை நான்நினைத்தாலும்கட்டுப்படுத்த முடியாதுஉன்னை அடைந்த பின்னேஎன் பயணம் ஓயும்அதுவரை ஓய்வில்லை எனக்கு!
மூடப்பட்ட கதவின்அறைக்குள்முழுமையாய்எல்லாம் கிடைத்தனஎன்ன சுகம்என்ன ஆனந்தம்உணவும் உணர்வும் கிடைத்தன அங்குபகையும் இல்லைபகை எதிர்ப்பும் இல்லைஅன்பும் அரவணைப்பும்தான்அங்கு கிடைத்தன பாசத்தடவல்களும்பரிமாற்றஆழ்ந்த அன்பும்தான்அங்கு கண்டேன்வேசமும் இல்லை- நல்வேடம் தாங்கியவிஷக்கிரிமிகளும் அங்கில்லை....ஐயிரெண்டு திங்கள்அங்கிருந்து பெற்ற சுகம்ஐயாயிரம் திங்கள்சென்றிடுனும்திருப்பு வரா எமக்கு...