வானவில் இரண்டை
நேரெதிர் என
இணைத்திட்டது போல்
இதழவள் கொண்டாள்?
எப்படி செதுக்கினான்
இச்செவ்விதழை
கற்சிலை கொண்டா
இருக்காது அதற்கு
மென்மையில்லவே இல்லை
எங்கிருந்து பெற்றான்
இதற்கான கலவையை
பிரம்மதேவன்
ஒரு வேளை
மலர்களின் கலவையோ?
அவ்விதழின்
வளைவுசுழிவை
எங்கு கற்றான்
நான்முகன்
சில வேளை
நதிகளிலிருந்தோ?
இருக்கலாம்!
வளர்பிறை இரண்டை
எப்படி பொருத்தினான்
ஓரிடத்தில்?
விண்மீன்களிடம்
சொட்டு சொட்டாய்
கடன்வாங்கி
கடைந்தெடுத்தபோது
வந்ததோ இவளது
உதட்டின் நிறம்!
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
கொவ்வை அவள்
செவ்வையிதழ் சொல்ல....