Thursday, August 13, 2009
காதல் சுகமானதா?
தூக்கத்தில் நடக்கிறேன்
தனிமையில் ஏதேதோ பேசுகிறேன்,
கண்கள் மூடினாலும்
தூக்கம்வர மறுக்கிறது,
ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொருயுகமாக தோன்றுகிறது,
அன்பாய் பேசும்
அம்மாவிடம் எரிந்து விழுகிறேன்,
அம்மா அப்பா
பெரிதாய் தெரியவில்லை,
புத்தகம் திறந்தால்
புத்தகத்துடன் கதைக்கிறேன்
பக்கத்தில் நண்பன்
பைத்தியமாடா? என்று கேட்கிறான்,
படிப்பில் நாட்டமில்லை,
எல்லா முகத்திலும் அவளே தெரிவதால்
காணும் ஒவ்வொரு பெண்ணையும்
பார்த்து பல்லிளிக்கிறேன்,
இவ்வளவும் வழமைக்கு மாறாக
நடக்கின்றன
அப்படியென்றால் காதல் சுகமானதா?
இல்லை இல்லை காதல் பெரும் அவஸ்தை...
அன்புடன்
க.Eலட்சியன்
Monday, August 10, 2009
பனிச் சாரல் கொண்டு - உன்முகம் துடைப்பேன்....
முகம் துடைப்பேன்
மழைத்தூறலில் மஞ்சள் கரைத்து
உனை நீராட்டுவேன்!
பூக்களின் மகரந்தம் அரைத்து
உன்னில் பூசி
நறுமணமாக்குவேன்!
வெண்பாக்கள் தொடுத்து
உன்பால் கவிபுனைவேன்
செந்தமிழ் சிலவெடுத்து - உன்
செந்நிற அழகை
செதுக்கிடுவேன் வரிகளில்!
கம்பளமாக விரியும்
பச்சைப்புல்வெளியில்
உனக்கெனவும் எனக்கெனவும்
மலர்களாலான பாயொன்று விரித்திட்டு
அங்கே உட்கார்ந்து இருவரும்
அண்ணார்ந்து ஆகாய நிலவை
சாட்சியாய் வைத்து
காதல் சல்லாபம் புரிவோம்
விண்மீன்கள் வெட்கத்தில
ஒருகண் மறைத்து
ஓரக்கண்ணால் எமைப்பார்த்து
பவ்விய சிரிப்பு சிரிக்கட்டும்!
ஓவியர் பலரை அழைத்து
உன்னழகை நான்சொல்
வரைந்திட நிறச்சேர்க்கைக்கு
வானவில்லை வரவழைப்பேன்....
கவிவல்லோரை அழைத்து
காவியம் படைத்திட
மானியமாய் அவர்களுக்கு
தானியம்போல் தங்கம் கொடுப்பேன்!
தொடரும்.......
என்சிந்தனையில் ஏற்பட்ட தடங்களுக்கு வருந்துகிறேன் யாவும் கற்பனை.
Sunday, August 9, 2009
உடன்பிறப்புக்கள்
என்னை பெற முன்பே!
உம்மை எனது
வழிகாட்டிகளாய்
ஈன்றெடுத்து
பரிசளித்தாள்!
கரடு முரடான
பாதை அதை
இலகுவாக்க
முன்னே வந்தனர்
என் சோதரர்
பின்னே எனக்கென்ன
தெரியும் கஸ்டம் என்றால்!
எங்கிருந்து
இன்னல்கண்டாலும்
நல்வழிகாட்டும்
கலங்கரை
விளக்குகள்
அவர்களே!
எப்படி வாழணும்
என்பதை
அவர்கள்
வாழ்ந்து கொண்டே
காட்டுகின்ற
என் வரலாற்று
செதுக்கிகள்!
தான் பட்ட துன்பங்கள்
தன்தம்பி படக்கூடாது என
தன்னலம் அற்று
தடையகற்றியவர்கள்!
எனக்குத்துணைகளாய்
என்னைப்பொறுத்தவரை
இறைவன் தந்த
ஈடற்ற பொக்கிஷங்கள்!
வாழணும் என்றும்
சோதரரே
உம்மோடு ஒன்றுபட்டு
என்றுதான் இன்றும்
என்றும் இறைவனை
பிராத்திக்கின்றேன்!
கண்ணை இமை
காப்பது போல்
என்னை நீவீர் காக்கும்
பாதுகாப்பு
சுவர்கள் நீங்களே!
என்றுமே
குறையாது
சுரக்கின்ற
பாசத்தின்
சுரப்பிகள்!
எப்பிறப்பிறப்பிலும்
எவ்வாறு பிறப்பினும்
எனக்கு நீவீர்
உடன்பிறப்புக்களாய்
பிறந்திடுவீர்! என்
இரத்த உறவுகளே!
Monday, August 3, 2009
உன்வருகையை எதிர்பார்த்து!
உனக்காக
இறைவனை
பிராத்திக்க முடியாதுள்ளது
ஏனெனில்
என்மனத்தை நீ
சிறைப்பிடித்துவிட்டாய்
மனம் இல்லாமல்
எப்படி இறைவனை
பிராத்திப்பேன்...
கண்ணே!
கடவுளைப் பூசிக்க
பூக்கள் இல்லை
என்னிடம்...
எல்லாப்பூக்களையும்
நீ வரும் பாதையில்
தூவி விடுவதால்...
என்னவளே!
மூளைக்கு தகவல்
வழங்கியான மூளியின்
கட்டளையை
கால்கள் ஏற்க மறுக்கின்றன
ஏனெனில்
உன்னை நோக்கி
வருவது என்கால்களுக்கு
பழக்கமாகிவிட்டதால்...
பெண்ணே!
இரவில்
எனக்குப் பக்கத்தில்
உனக்காய் ஒரு
படுக்கையை விரிக்கிறேன்
பூக்களால்.
கனவில் நீ வருவாய்
என்ற
நம்பிக்கையில்.....
எல்லோரும்
உறங்கிய பின்
எனக்கும் நிலவுக்கு
நிழல் யுத்தம் நடக்கிறது
என்னவளிடம்
எனக்காய்
தூது செல்ல
நிலா மறுப்பதால்...
அன்போடு அம்மாவின்
அழைப்பு
ஆத்திரத்தில்
எரிந்தவிடுகிறேன்
உன்னைப்பற்றிய
சிந்தனையை
சிதறடித்ததற்காக...
என் இதயத்துள்
கோயில் ஒன்று
கும்பாபிஷேகத்திற்கு
தயாராக...
நீதான் கடவுள்
உன்வருகையை
எதிர்பார்த்து நான்....
என்றும் உயிர்ப்புடன் என்காதல்
நாதியற்று
நானிருந்த வேளையது
தேதிசொல்லி
காதல் சொன்னாய்
என்பேறு என்றெண்ணி
ஆனந்தத்தில்
மிதந்தேன்
சில நாளதில்
கைவிட்டாய்
கழுத்தறுத்தாய் நீ
இன்று
நட்டாற்றில்
நாதியற்ற
கைப்பொம்மையாய்
தண்ணீரீல்
அடித்செல்லப்படுகிறேன்...
உன்வார்த்தைகள் எங்கே
உன்பொய்மையில்
உன் காதல் செத்தது
என்றும் உயிர்ப்புடன்
என்காதல்..
Sunday, August 2, 2009
நித்தம் முத்தம் சத்தத்துடன்

யுத்தமோ
முத்தமோ
சத்தத்துடன்....
நீயும் நானும்
ஒன்றையொன்று
ஈர்க்கும்
ஏற்ற காந்தங்கள்
முத்தத்தில்தான்
ஒட்டிக்கொள்வோம்...
மழையென வந்து
துளியென தூறி
மண்ணென ஆன
பெண்ணெ
உனக்கிடும்
முத்தங்கள் ஆயிரமாயிரம்....
அலையென தாவி
கரையான உனக்கு
இட்டுடுவேன்
இச்சை முத்தங்கள்
எக்கணமும்...
ஆண்மேகம் நான்
பெண்மேகம் நீ
மோதிக்கொண்டு
முத்தமிட
எச்சைகளாக
மழைநீர்....
நித்தம்
முத்தம்
சத்தத்துடன்......
காதல் பிறந்து ஓராண்டாகிறது .......சிறுகதை........
....விடியவதற்கு 2 மணித்தியாலயங்கள் இருக்கும்போதே எழும்பி விட்டாள் கேமா, என்றும் இல்லாதவாறு மகிழ்வுடனும், புதுதெம்புடனும் காணப்பட்டாள், வேக வேகமாக காலைக்கடன்கடன்களை முடித்துவிட்டு வருவதற்கும் அவளது அப்பா அம்மா நித்திரைவிட்டு எழும்புவதற்கு கணக்காக இருந்தது, ஒரு போதும் அவள் அப்படி எழும்புவதில்லை, இன்று மட்டும் தாம் எழும்பு வதற்கு முன்பே எழுந்து , எல்லாக்காரியங்களையும் முடித்துவிட்டு தங்களுக்கு தேனீர்க்கப்புடன் வணக்கம் சொல்லி நின்ற கேமாவை பார்த்து வியப்படைந்தனர் அவளது அம்மாவும், அப்பாவும் தம்பியும், என்ன கேமா இன்று மழைகட்டாயம் வரும்போல இருக்கே என்று வியப்புக்குறி சொன்னார்கள், இதைக்கேட்ட அவளுக்கு உள்ளுக்குள் மழை பெய்த சந்தோசம்தான் ஏற்பட்டது, அவர்கள் சொன்னதற்கு அல்ல அவளது காதலுக்கு ஒரு வயதாகிறது என்ற மகிழ்ச்சியில்... கேமா மெல்ல சென்ற ஆண்டின் நண்பர்கள் தின நிகழ்வுகளுக்கு மூழ்கினாள், ஆகாஷ் கேமாவின் நண்பன் பள்ளிக்கூடத்தில் சேர்ந்ததில் இருந்து இருவரும் இணைபிரியா நண்பர்கள் படிப்பு, விளையாட்டு, பொழுதுபோக்கு, எதுவாகினும் எங்கு சென்றாலும் அவர்கள் கூடுதலாக பிரியா நண்பர்களாகவே இருந்தனர். அவர்களுக்குள் ஒருவருக்கொருவரை விட்டுக்கொடுக்கின்ற பண்பு, எந்த விடயத்தையும் மனம்விட்டு பேசிக்கொள்கின்ற மொத்தத்தில் அந்த நட்பு இணை அவர்களே...இருந்தும் அவர்களுக்குள் காதல் அவர்களை அறியாமலே முளைவிட்டது, அதுவரை நண்பர்களாக பழகி வந்தவர்களுக்கு ஆகஸ்ட்02, 2008 அன்றைய நண்பர்கள் தினம் ஒரு சபாலாகவே அமைந்து விட்டது, காலையிலே வருவதாக கூறிய ஆகாஷை எதிர்பார்த்து கடற்கரையில் மெல்ல அங்கும் இங்கு நடந்த வண்ணம் இருந்தாள் கேமா, சில நிமிடங்களில் ஆகாஷ் வந்தான் கையில் ஒரு பொக்கையுடன், வந்தவன் அந்த பொக்கையை கொடுத்து ஐ லவ் யூ கேமா என்று எந்தவித தயக்கமும் இன்றி சொன்னான், கேமா இதை எதிர்பார்க்கவே இல்லை, வியப்பில் விழிகள் அகன்றன, இருந்தும் உள்மனது மகிழ்ச்சியில் துள்ளியது, சுதாகரித்துக் கொண்டு இப்படி திடிரென்று சொன்னால் எப்படி என்று கேட்டாள் , கேமா இனியும் நாம் நண்பர்கள் தினத்தை தப்பாக பயன்படுத்தக்கூடாது, நட்பு தந்த காதல் பரிசு நீயே என்று கவிவடிவில் வார்த்தைகளை வழங்கினான் கேமா மெல்லென புன்முறுவல் செய்து காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாள் , நண்பர்கள் தினம் காதலுக்கு பிள்ளையார் சுழி போட்டது. ...... நினைவு மீள கேமா ஆகாஷ்யுடன் 2வது காதல் ஆண்டை கொண்டாட கடற்கரையை நோக்கி புறப்பட்டாள்.
Saturday, August 1, 2009
நட்"பூ"
Thursday, July 30, 2009
கண்ணெதிர் தோன்றி
காட்சி கொடுத்து
பின்னரை நொடியில்
மின்னலாய் மறைகிறாய்!
வரட்சியாய் நான்
துளித்துளியாய் நீ(ர்) -என்
விழியகல
விடைபெறுகிறாய் ஏன்?
கருவுடையாள் பெண்
உருத்தருவாளவள்,
நீயும் பெண்தானே
நான் சுமக்கும்
உன்மீதான காதலின்
கருவறுப்பதேன்?
மேகமாய் நான்
வெண்ணிலா நீ
உனைக்கடந்து
செல்கின்றேன் - எனை
கைத்தலம்பற்றிக் கொள்வாயா?
ஊசலாடும் என்
மனதின்
நிறுத்த கையிறாக
நீ இருக்கிறாய்
நீட்டாதே இன்னும்
நாளை நாளை
என்று!
என் வாழ்வு
இருளாகிறது
முழுமையாய் உன்
முகம் காட்டு
என் நிலவே.
Wednesday, July 29, 2009
பெண்ணும் றோஜாவும்
Tuesday, July 28, 2009
யாசகன்
உன் பார்வையை இறைந்து கேட்கிறேன்
Monday, July 27, 2009
வர்ணிக்க வார்த்தைகள் இல்ல
வானவில் இரண்டை
நேரெதிர் என
இணைத்திட்டது போல்
இதழவள் கொண்டாள்?
எப்படி செதுக்கினான்
இச்செவ்விதழை
கற்சிலை கொண்டா
இருக்காது அதற்கு
மென்மையில்லவே இல்லை
எங்கிருந்து பெற்றான்
இதற்கான கலவையை
பிரம்மதேவன்
ஒரு வேளை
மலர்களின் கலவையோ?
அவ்விதழின்
வளைவுசுழிவை
எங்கு கற்றான்
நான்முகன்
சில வேளை
நதிகளிலிருந்தோ?
இருக்கலாம்!
வளர்பிறை இரண்டை
எப்படி பொருத்தினான்
ஓரிடத்தில்?
விண்மீன்களிடம்
சொட்டு சொட்டாய்
கடன்வாங்கி
கடைந்தெடுத்தபோது
வந்ததோ இவளது
உதட்டின் நிறம்!
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
கொவ்வை அவள்
செவ்வையிதழ் சொல்ல....
குளிர வைக்கும் "தண்" ணீராய்
இலையின்றி
காய்ந்த மரமாய்
நின்றவேளை
என்னில்
மழையாய் பொழிந்தாய்
தரிசு நிலமாய்
நான் நாட்களை
கடத்திய வேளை
றோஜா செடியாய்
என்னில் மலர்ந்தாய்
சின்னச்சின்னதாய் உள்ள
விண்மீன்கள் நடுவே
வந்துதித்த நிலாத்தேவையடி நீ
உறக்கம் இழந்து
உறங்க மனமின்றி இருந்தேன்
உன் வருகைக்காக
உறங்குகிறேன்
கனவில் நீ வருவாய் என।
வரண்ட பூமியதில்
தாகத்தின்
கொடுமையில்
கானல் நீரை நம்பி
ஏமாந்து ஏமாந்து
இருந்த வேளை
என்னருகே மெல்லென
பாய்ந்து செல்கின்ற
நதியாய் வந்தாய்!
இப்போ நீ எங்கோ
நானெங்கோ
இருந்தும்
கொடுந்தளீர் நெருப்பின்
அணைத்து
நடுவேயென்னை
குளீர வைக்கும்
தண்ணீராய் நிந்தன்
நினைவுகள் நிழலாய் தொடர்கின்றன,,,.
Sunday, July 26, 2009
பாரடி பாரடி என் முகம் பாரடி
என் முகம் பாரடி
ஞாபகம் ஏனடி
ஏனடி இல்லையோ இல்லையோ
தேன் சிந்தும் உன் முகம்
ஓர்முறை காட்டடி காட்டடி!
பாரடி பாரடி என்
தேகம் பாரடி
போகிறேன் போகிறேன்
இறுதி நாட்களை
எண்ணியே எண்ணியே
ஏனடி தாமதம்
இரக்கமே என்னுடன்
இல்லையோ இல்லையோ
பாரடி பாரடி என்
தவம் பாரடி
நீயின்றிய வாழ்வு
எனக்கு ஏதடி ஏதடி
உன் பூ முகம்
காணவே என்
இருவிழிகள் ஏங்குதே!
பாரடி பாரடி
இப்பாவியை பாரடி
ஊனுடல் உருகி
என்னுள்ளம் கலங்குதே
உன்னுடன் பழக
என்னன்பு அலையுதே
அலையுதே!
பாரடி பாரடி இப்பவே
பாரடி
இல்லையே இல்லையே
என்னுடல் விட்டு
உயிரது போகுமே போகுமே!
பாரடி பாரடி!
Saturday, July 25, 2009
இன்றும் என்வார்த்தைகள் பொய்யாது
என்றுரைத்தாய்
உனக்காக வாழ்வேன்!
பதிலுக்கு நானும்
சொன்னேன்...
இடையில் சில
நாட்கள் நகர
இன்னொருத்தனுடன்
நீ வாழ்கிறாய்...
எனக்காகவா
இன்னொருத்தனுடன்
வாழ்கிறாய்??
உன் வார்த்தைகள்
பொய்யானது.
என்வார்த்தைகள்
இன்றும் உண்மையாய்..
உனக்காக வாழ்வேன்
என்றுதான் சொன்னேன்
உனக்காக மட்டுமல்ல...
அவ்வாறெனின்
சோகத்தால் வாடி
முகமெல்லாம் தாடி...
ஈற்றில் என்னை
பெட்டியை மூடி
புதைத்திருப்பர்
பலர் கூடி...
நான் புத்துணர்வுடன்
இன்னும் எனக்காய்
என் பெற்றோருக்காய்
உறவினருக்காய்
வாழ்கிறேன்
வாழ்வேன்...
ஆனால்
இன்றும் என்
வார்த்தைகள்
பொய்யாது
போகின்றன...
Friday, July 24, 2009
ஒவ்வொன்றினும் உன் நினைவுகள் தொடர
பார்க்க சென்று
கண்ணாடி அங்கே
முன்னாடி நின்றேன்...
எப்பவோ பார்த்த
உன் உருவம்
என் விழியின்
கருவளையத்தில்
சாய்வாய் காட்சி
தருகிறதடி...
இமைக்கவும்
பயப்படுகிறேன்
உன்மீது என்
என்இமைகள் பட்டு
விடக்கூடாதென்பதற்காக...
பூங்காவனம்
அங்கு மெல்லென
தென்றலின் தாலாட்டில்
ஆடிடும் பூக்கள்
ஒவ்வொன்றின் நடுவே
ஒளியாய் காட்சி
தர...
பூப்பறிக்க
என் கரங்கள் மறுக்குதடி...
ஒவ்வொன்றினும்
உன் நினைவுகள்
தொடர...
செயலற்றுப்போகிறேன்..
எனினும் உன்னை எனக்கு பிரியமாய் பிடித்திருக்கிறது "பிரிவே"
ஒரு சிறைச்சாலை
உள்ளத்தால்
ஒன்றுபட்ட
இதயங்களை
இணைய விடாமல்
நாட்கணக்கில்
தனித்தனியே
சிறையில்
பூட்டி வைத்து
ஈற்றில்
ஈவிரக்கமின்றி
கொன்று தீர்க்க
வழிசெய்யும்
நரகச்சாலை...
எனினும் உன்னை
எனக்கு பிரியமாய்
பிடித்திருக்கிறது
"பிரிவே"
பரஸ்பர
அன்பின்
ஆழத்தை
அறிவித்து
அதை இன்னும்
கூர்மையடையச் செய்யும்
சக்தி உனக்கு
மட்டும்தான் உண்டு
அதனால் உன்னை
எனக்கும் பிடிக்கிறது.....
விட்டுச்சென்ற காதலும், நிழலாய் தொடரும் நினைவுகளும்.
ஒரு இதமான
குளீர் காலத்தின்
சுகந்தத்தை
அளிக்கிறது...
உடலை
உறைய வைக்கும்
பனியின் தாக்கமும்
வெதுவெதுப்பான
வெம்மை தந்து
சுகமாய் இருக்கிறது...
எல்லாம் நீ
பிரிந்து சென்றபோது
கூறிய வார்த்தைகளும்
விட்டுச்சென்ற காதலும்
நிழலாய் தொடரும்
சுகமான நினைவுகள்
தருகின்ற...
காலநிலை
தற்ப வெப்ப மாற்றங்கள்தான்...
Monday, July 20, 2009
அழகு
வானவில்லின் நிறமழகு
வடித்த சிலையழகு
வான் அங்கே நிலாவழகு
வாய்விரிக்க பல்லழகு
வாரணமாயிரம் அழகு
வந்தால் முன்னழகு
வழிவிட்டால் பின்னழகு
வாய்த்த இதழழகு
வா வா நீ
வந்தபின்னும் நீ அழகு
வரப்போகும் மாமியார் வடிவழகு
வாய்த்த என் நண்பர் எல்லாம் நல்லழகு!



