Saturday, November 29, 2008

கங்கை

நுதல் விழி
நாட்டத்து
இறையோன்
தலை மீது
பிறையுடன்
அமர்ந்துறைந்து
அருளோங்கும்
தேவியே! - உன்
புகழை
பறை சாற்ற
அறை கூவி
அழைப்பேன்
மழையென
கவிமழை
பொழிய
அருள்வாய்
எஞ்ஞான்றும்...
புவி மீது
புகழடைந்து
விண் மீது
உன் அடி
பணியவே!!!

புராணங்கள் எல்லாம்
உன் கதை
சொல்லும்
மேவிய மேதை
யாவரும்
கூவியே உன்தன்
புகழ் தனை
காவியமாக்கி
சாதனை செய்வர்!!!

பகிரத மாமன்னன்
புவியாண்ட
போது
அவனுருகி
சிவனை நினைந்து
ஆழ்
தவமிருந்து
பெற்ற பேறே
விண்ணிருந்து _ நாம்
உமைப்பெற்ற
வழியென
முன்னோர்
ஜதிகம் சொல்லும்
தாயே!!!

புவி வாழும்
உயிர் யாவும்
அவை வாழ
உனை இன்றி
அமையும்
அணுவும் இருக்காது
என் நீர்த்தாயே

எத்தனை உலகம்
அத்தனை எங்கும்
நீ இன்றி
அணுவும் அசையாது


பிறப்பிறப்பெல்லாம்
உன்னாலே...
இருந்தவர்
பின்
இறந்தும் - அவர்
சிறப்பை இன்னும்
இருப்பவர்
பெசுவர்...
அவர்தம் இருப்பு
நிலையாக
நாதமாய்
இருப்பதும்
நீயே!

குடிக்க தண்ணீர்
பின் பசிக்கும்
தின்ன சோறு
அதை
அவிக்க வென்னீர்
.... வேண்டும் அரிசி...ம்
உருவாக்க நெல்லு
போவேன் செய்ய
பயிரு
பாச்ச
வேண்டும்
நீரு
அப்போ
எல்லாமே
நீதானே தாயே!!!