Thursday, July 30, 2009

கண்ணெதிர் தோன்றி

கண்ணெதிர் தோன்றி
காட்சி கொடுத்து
பின்னரை நொடியில்
மின்னலாய் மறைகிறாய்!

வரட்சியாய் நான்
துளித்துளியாய் நீ(ர்) -என்
விழியகல
விடைபெறுகிறாய் ஏன்?

கருவுடையாள் பெண்
உருத்தருவாளவள்,
நீயும் பெண்தானே
நான் சுமக்கும்
உன்மீதான காதலின்
கருவறுப்பதேன்?

மேகமாய் நான்
வெண்ணிலா நீ
உனைக்கடந்து
செல்கின்றேன் - எனை
கைத்தலம்பற்றிக் கொள்வாயா?

ஊசலாடும் என்
மனதின்
நிறுத்த கையிறாக
நீ இருக்கிறாய்
நீட்டாதே இன்னும்
நாளை நாளை
என்று!

என் வாழ்வு
இருளாகிறது
முழுமையாய் உன்
முகம் காட்டு
என் நிலவே.

Wednesday, July 29, 2009

பெண்ணும் றோஜாவும்


"றோஜா அழகு
அருகே முள்
மெல்லென பறித்திடு
இல்லையேல்
சீண்டாப்படுவாய்!

பெண்ணது மென்னை
அங்கே உண்டு வன்மை
அணுகு பெண்மையை
மெல்லென அணுகு
இல்லையேல்
மீளாது
அங்கும் சீண்டப்படுவாய்"



Tuesday, July 28, 2009

யாசகன்


இருகரங்கள்
நீட்ட உன்னை என்னால்
எட்ட முடியவில்லை
நட்பே...

அன்றாடம் நாம்
பரிமாறிக் கொள்ளும்
பண்பான
வார்த்தைகள்
பரிவட்டம் வீச
பற்றிக்கொள்கிறேன்
உன் இனிய நட்பை...

என்
மனக்காயங்கள் போக
உன்
மனக்கரங்களை நீட்டி
தடவும் இனிய
வார்த்தைகளுக்காக
ஏங்கி நிற்கும் நான் உன்
நட்பை யாசிக்கும்
யாசகன் ....

உன் பார்வையை இறைந்து கேட்கிறேன்




ஊடுருவிய
உன் பார்வை
மழுங்கிப் போன
மனதின் ஓட்டைகளை
ஒட்டியதோடு
சிதைந்து கிடந்த என்
சிந்தனையாற்றலை
திடமாக்கி
தீர்க்க தரிசனம் கொடுத்தது
வாழ்வின் இனிதான
சுழற்சிக்கு
உன் பார்வைக்குள் பல
செயலாக்கிகள் உள்ளதடி
உன்விருப்போடு என்றும்
உன்பார்வையை
இறைந்து கேட்கிறேன்.

Monday, July 27, 2009

வர்ணிக்க வார்த்தைகள் இல்ல











வானவில் இரண்டை
நேரெதிர் என
இணைத்திட்டது போல்
இதழவள் கொண்டாள்?
எப்படி செதுக்கினான்
இச்செவ்விதழை
கற்சிலை கொண்டா
இருக்காது அதற்கு
மென்மையில்லவே இல்லை
எங்கிருந்து பெற்றான்
இதற்கான கலவையை
பிரம்மதேவன்
ஒரு வேளை
மலர்களின் கலவையோ?
அவ்விதழின்
வளைவுசுழிவை
எங்கு கற்றான்
நான்முகன்
சில வேளை
நதிகளிலிருந்தோ?
இருக்கலாம்!
வளர்பிறை இரண்டை
எப்படி பொருத்தினான்
ஓரிடத்தில்?
விண்மீன்களிடம்
சொட்டு சொட்டாய்
கடன்வாங்கி
கடைந்தெடுத்தபோது
வந்ததோ இவளது
உதட்டின் நிறம்!
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
கொவ்வை அவள்
செவ்வையிதழ் சொல்ல....

குளிர வைக்கும் "தண்" ணீராய்

சருகாய்க் கூட
இலையின்றி
காய்ந்த மரமாய்
நின்றவேளை
என்னில்
மழையாய் பொழிந்தாய்

தரிசு நிலமாய்
நான் நாட்களை
கடத்திய வேளை
றோஜா செடியாய்
என்னில் மலர்ந்தாய்

சின்னச்சின்னதாய் உள்ள
விண்மீன்கள் நடுவே
வந்துதித்த நிலாத்தேவையடி நீ

உறக்கம் இழந்து
உறங்க மனமின்றி இருந்தேன்
உன் வருகைக்காக
உறங்குகிறேன்
கனவில் நீ வருவாய் என।

வரண்ட பூமியதில்
தாகத்தின்
கொடுமையில்
கானல் நீரை நம்பி
ஏமாந்து ஏமாந்து
இருந்த வேளை
என்னருகே மெல்லென
பாய்ந்து செல்கின்ற
நதியாய் வந்தாய்!

இப்போ நீ எங்கோ
நானெங்கோ
இருந்தும்
கொடுந்தளீர் நெருப்பின்
அணைத்து
நடுவேயென்னை
குளீர வைக்கும்
தண்ணீராய் நிந்தன்
நினைவுகள் நிழலாய் தொடர்கின்றன,,,.

Sunday, July 26, 2009

பாரடி பாரடி என் முகம் பாரடி

பாரடி பாரடி
என் முகம் பாரடி
ஞாபகம் ஏனடி
ஏனடி இல்லையோ இல்லையோ
தேன் சிந்தும் உன் முகம்
ஓர்முறை காட்டடி காட்டடி!

பாரடி பாரடி என்
தேகம் பாரடி
போகிறேன் போகிறேன்
இறுதி நாட்களை
எண்ணியே எண்ணியே
ஏனடி தாமதம்
இரக்கமே என்னுடன்
இல்லையோ இல்லையோ

பாரடி பாரடி என்
தவம் பாரடி
நீயின்றிய வாழ்வு
எனக்கு ஏதடி ஏதடி
உன் பூ முகம்
காணவே என்
இருவிழிகள் ஏங்குதே!

பாரடி பாரடி
இப்பாவியை பாரடி
ஊனுடல் உருகி
என்னுள்ளம் கலங்குதே
உன்னுடன் பழக
என்னன்பு அலையுதே
அலையுதே!

பாரடி பாரடி இப்பவே
பாரடி
இல்லையே இல்லையே
என்னுடல் விட்டு
உயிரது போகுமே போகுமே!
பாரடி பாரடி!

Saturday, July 25, 2009

இன்றும் என்வார்த்தைகள் பொய்யாது

எனக்காக வாழ்வேன்
என்றுரைத்தாய்
உனக்காக வாழ்வேன்!
பதிலுக்கு நானும்
சொன்னேன்...

இடையில் சில
நாட்கள் நகர
இன்னொருத்தனுடன்
நீ வாழ்கிறாய்...
எனக்காகவா
இன்னொருத்தனுடன்
வாழ்கிறாய்??
உன் வார்த்தைகள்
பொய்யானது.

என்வார்த்தைகள்
இன்றும் உண்மையாய்..
உனக்காக வாழ்வேன்
என்றுதான் சொன்னேன்
உனக்காக மட்டுமல்ல...
அவ்வாறெனின்
சோகத்தால் வாடி
முகமெல்லாம் தாடி...
ஈற்றில் என்னை
பெட்டியை மூடி
புதைத்திருப்பர்
பலர் கூடி...

நான் புத்துணர்வுடன்
இன்னும் எனக்காய்
என் பெற்றோருக்காய்
உறவினருக்காய்
வாழ்கிறேன்
வாழ்வேன்...
ஆனால்
இன்றும் என்
வார்த்தைகள்
பொய்யாது
போகின்றன...

Friday, July 24, 2009

ஒவ்வொன்றினும் உன் நினைவுகள் தொடர

என் முகம்
பார்க்க சென்று
கண்ணாடி அங்கே
முன்னாடி நின்றேன்...

எப்பவோ பார்த்த
உன் உருவம்
என் விழியின்
கருவளையத்தில்
சாய்வாய் காட்சி
தருகிறதடி...
இமைக்கவும்
பயப்படுகிறேன்
உன்மீது என்
என்இமைகள் பட்டு
விடக்கூடாதென்பதற்காக...

பூங்காவனம்
அங்கு மெல்லென
தென்றலின் தாலாட்டில்
ஆடிடும் பூக்கள்
ஒவ்வொன்றின் நடுவே
ஒளியாய் காட்சி
தர...
பூப்பறிக்க
என் கரங்கள் மறுக்குதடி...

ஒவ்வொன்றினும்
உன் நினைவுகள்
தொடர...
செயலற்றுப்போகிறேன்..

எனினும் உன்னை எனக்கு பிரியமாய் பிடித்திருக்கிறது "பிரிவே"

பிரிவே நீ
ஒரு சிறைச்சாலை

உள்ளத்தால்
ஒன்றுபட்ட
இதயங்களை
இணைய விடாமல்
நாட்கணக்கில்
தனித்தனியே
சிறையில்
பூட்டி வைத்து
ஈற்றில்
ஈவிரக்கமின்றி
கொன்று தீர்க்க
வழிசெய்யும்
நரகச்சாலை...

எனினும் உன்னை
எனக்கு பிரியமாய்
பிடித்திருக்கிறது
"பிரிவே"
பரஸ்பர
அன்பின்
ஆழத்தை
அறிவித்து
அதை இன்னும்
கூர்மையடையச் செய்யும்
சக்தி உனக்கு
மட்டும்தான் உண்டு

அதனால் உன்னை
எனக்கும் பிடிக்கிறது.....

விட்டுச்சென்ற காதலும், நிழலாய் தொடரும் நினைவுகளும்.

உருக்கும் வெயிலும்
ஒரு இதமான
குளீர் காலத்தின்
சுகந்தத்தை
அளிக்கிறது...

உடலை
உறைய வைக்கும்
பனியின் தாக்கமும்
வெதுவெதுப்பான
வெம்மை தந்து
சுகமாய் இருக்கிறது...

எல்லாம் நீ
பிரிந்து சென்றபோது
கூறிய வார்த்தைகளும்
விட்டுச்சென்ற காதலும்
நிழலாய் தொடரும்
சுகமான நினைவுகள்
தருகின்ற...
காலநிலை

தற்ப வெப்ப மாற்றங்கள்தான்...

Monday, July 20, 2009

அழகு

வண்ணக்கலையழகு
வானவில்லின் நிறமழகு
வடித்த சிலையழகு
வான் அங்கே நிலாவழகு
வாய்விரிக்க பல்லழகு
வாரணமாயிரம் அழகு
வந்தால் முன்னழகு
வழிவிட்டால் பின்னழகு
வாய்த்த இதழழகு
வா வா நீ
வந்தபின்னும் நீ அழகு
வரப்போகும் மாமியார் வடிவழகு
வாய்த்த என் நண்பர் எல்லாம் நல்லழகு!

ராஜ மகன் நீ அன்றோ













ஊரார் மலடி என
கூடியிருந்து
குற்றம் சொல்லாமல்
ஓடி வந்து என்வயிற்றுதித்த
ராஜ மகவே
வாடா உனக்கொரு
ஆசை முத்தம்
தாறேன்...



தேசம் எல்லாம்
சுற்றி வேண்டாத
சாமியில்ல
நாள் இழுத்து நாவிழுத்து
வேண்டிய வேண்டலுக்கு
வேந்தன் என வந்த
வெற்றித்திலகமடா நீ
எனக்கு...



ஊர்முழுக்க உறவிருந்தும்
ஒட்டி உறவாட
பாசம் இருந்தும்
நான் இருந்தேன் தனியாய்
நீ வந்தாய் என் துணையாய்
இனிய மகனே...



பத்து மாதம்
உனைச்சுமக்க
பட்ட வேதனை
பெரிதன்று உனை
பார்த்துப்பார்த்து
நான் மகிழ
பார்வந்த என்
பார் வேந்தன் நீ
அன்றோ...



எனக்கினி என
ஒன்றும் வேண்டேன்
எனக்கொரு தாய்
என்ற அந்தஸ்து
தந்த உன்னை
ஊட்டி வளர்க்க
ஒருபடி ஆயுள்
வேண்டி நிற்பேன்
என் மகனே!

Sunday, July 19, 2009

நட்பு

நீ ஒரு நிறம்..
நான் ஒரு நிறம்..
உனக்கொரு தாய்..
எனக்கொரு தாய்..
நானும் நீயும்
எங்கெங்கோ
பிறந்தோம்...
ஆனால் நட்பின்
பாதையில்
இணைந்திட்டோம்॥
இனியென்ன நட்பே
எனக்கும் உனக்கும்
உரிய பாதை
ஒரு தன்னலமற்ற பாதையாய்
தொடர்வோம் நம் பயணம்...

கொல்லும் காதல்


என் இதயத்தை
குத்தி கூறுபோடுகிறது
காதல்...
என் காதலே
என்னுயிர் தின்னும்
கொலைஞன் ஆனது
இதயம் சிதறி
துளித்துளியாய்
சொட்டும் ரத்தத்தில்
இருக்கும் ஒவ்வொரு
அணுக்களும் உன்
பெயர் சொல்லுமடி ...

இலட்சியனின் கிறுக்கல்கள்: காதல்

இலட்சியனின் கிறுக்கல்கள்: காதல்

காதல்


ஓய்வில்லை

மலை முகட்டின்
உச்சியில் இருந்து
தடைகள் தாண்டி
வளைவு சுழிவுகள் என
கட்டுப்படுத் முடியாமல்
ஒடி வரும்
ஒரு அருவியாய்
நான்
எனக்காய் காத்திருக்கும்
கடலாய் நீ...

என்னை நான்
நினைத்தாலும்
கட்டுப்படுத்த முடியாது
உன்னை அடைந்த பின்னே
என்
பயணம் ஓயும்
அதுவரை ஓய்வில்லை எனக்கு!



கருவறை

மூடப்பட்ட
கதவின்
அறைக்குள்
முழுமையாய்
எல்லாம் கிடைத்தன
என்ன சுகம்
என்ன ஆனந்தம்

உணவும்
உணர்வும்
கிடைத்தன அங்கு

பகையும் இல்லை
பகை எதிர்ப்பும் இல்லை
அன்பும்
அரவணைப்பும்தான்
அங்கு கிடைத்தன

பாசத்தடவல்களும்
பரிமாற்ற
ஆழ்ந்த அன்பும்தான்
அங்கு கண்டேன்

வேசமும் இல்லை- நல்
வேடம் தாங்கிய
விஷக்கிரிமிகளும் அங்கில்லை....

ஐயிரெண்டு திங்கள்
அங்கிருந்து
பெற்ற சுகம்
ஐயாயிரம் திங்கள்
சென்றிடுனும்
திருப்பு வரா எமக்கு...

Saturday, July 18, 2009

அன்பு

உன்னுடல் பார்த்து
வருவதல்ல
அன்பு

உன்னுள்ள அழகை
உணர்ந்து வருவதே
அன்பு

பார்க்கும்போது
மட்டும்
பரிமாறிக்கொள்வதல்ல
அன்பு

எங்கிருந்தாலும்
பார்க்க துடிக்கும்
இயல்பே
அன்பு

தூர இருந்தும்
மனசார
உனக்காய்
வேண்டிக்கொள்வதே
அன்பு....





மரணம்

நாம் இருக்கும்
போது
வரத்துணிவற்ற
கோழை
மரணம்....

போன பின்பு
வந்து
கும்மாளமிடும்
வாயாடி மட்டுமே நீ...

நெஞ்சில் துணிவிருந்தால்
நேருக்கு நேரே
வந்து பார்...


Thursday, July 16, 2009

அஞ்சோம்

உன்னோடு நானும்
என்னோடு நீயும்
சேரும் நாட்களுக்கு
காத்திருக்க
வேண்டியதில்லை॥

செந்நிற அழகை
அந்த நிலத்தில்
பெய்யப்பட்ட மழை நீர்
பெற்று கலந்து விடுவது
போல உன் உள்ளமும்
என் உள்ளமும்
இரண்டற கலந்து
விட்டென॥

இனி நம்மை
பிரிக்க முடியாது
சில வேளை
விதி பிரித்தால்
அந்த விதியையும்
வெல்ல
உலகத்தை விட்டுப்
பிரியவும் அஞ்சோம்॥

மரணத்தையும் வெல்வோம்

உன் மனதையும்
என் மனதையும்
இறுக கட்டிவிட்டான்
இறைவன் ...

பின்னிப்பிணைந்து விட்டன
என் இதயமும்
உன் இதயமும்॥

இனி அந்த
கடவுளே
நினைத்தாலும்
எமை
பிரிக்க முடியாது॥

மரணம் எமை
தன் தழுவிக்கொண்டாலும்
அந்த மரணத்தையும்
வெல்வோம்....

Wednesday, July 15, 2009

ஓரக்கண்ணால்

உன் கண்
அழகில் என்
கண்கள்

மயங்கிவிட்டதடி...


ஓரக்கண்ணால்
மட்டும் உன்னை
பார்க்கிறேன்
முழுமையாய்
உன்னை பார்த்தால்
உன்னை
தொடர்ந்து பார்க்கும்
சக்தி அற்றதாகிடும்
என்பதால்...

Tuesday, July 14, 2009

நான் பேயனாகி

நான் ஒரு
கிரகத்திலும்
நீ ஒரு
கிரகத்திலும்
இருந்தென்ன
லாபம்!


கற்பனைக்
கனவில் மட்டும்
காட்சி தர
வானத்து நிலவுக்கு
அழைக்கிறாய்
கனவு முடிந்ததும்
தூரத்தே தூக்கியெறியப்படுகிறேன்


வெவ்வேறு இட
வாழ்வு வேண்டாம்
என்னை நீ அழை அல்லது
என்னோடு நீயும்
வந்துவிடு...

கனவில் மட்டும்
நீ வருகிறாய் அது
கலைந்ததும்
நான் பேயனாகி
உன்னை தேடி
அலைகிறேன்..

வண்டாக

பூவோ! அல்லது
பூவினுள் உள்ள
பூந்தேனோ?

எதுவாக நீஇருப்பினும்
உன்னை தினம்
நாடி வரும்
வண்டாக
நான் இருப்பேன்॥

Monday, July 13, 2009

நட்பும் காதலும்

ஆபத்தில்தன்
உயிர் கொடுத்து
நண்பனை
காத்திடுவது
நட்பு...

அன்புக்குரியவரின்
அழிவு கண்டு
மனம் ஆற்றாது
தானும்அழிந்து
போவது
காதல்...

Sunday, July 12, 2009

வைரமுத்து இங்குற்ற இந்நாள்

தமிழ்த்தாய் வயிற்றுதித்து
மலர்ந்த
கவிப்பூங்கா
ஒன்று புது
அகவை
காணுகிறது...

வைரமே வைரமே
நீ ஒன்றும் முன்பு
பெரிய மதிப்புடையோன்
அல்ல! எங்கள்
அண்ணல் பெருங்கவி
இங்குதித்த இந்நாளே
உன்பெயர் உலகறிந்தது...

முத்துவே முத்துவே
ஆழ்கடலில் நீ
வந்திட்டதால்
உனக்கு அந்தஸ்து
வந்ததென்று
எண்ணாதே!
எங்கள் தமிழவள்
ஈன்ற ஈடுணையற்ற
வைரமுத்து இந்நாள்
இங்குற்றதால்
உனக்கு வந்தது
புகழ்...

அமுதத்தினும் இனிய
தமிழ்தந்த
கறுப்பு வைரம்
புதுவகவை புகுகிறது
புதுவகவையே!
இனித்தான் உனக்கு
புகழ்...

வாழ்க வாழ்க
பெருங்கவி
பேரரசு வாழ்க
பெருமைபெற்ற
தமிழே எங்கள்
கவிப்பேரரசால்
வாழ்க...

மேகம்

உதவாமல் இருக்கின்ற
ஒன்றை தெரியாமலே
திருடி..
உதவுகின்ற வகையில்
சீரமைத்து எல்லோரும்

எல்லாம் மகிழ
தெரியக்கொடுக்கின்ற,
சொல்லாமல்
நன்மை பயக்கும்
பெருந்தகை....

சேர்த்து விடு

காற்றே உனக்கு
ஏன்
ஓர நீதி...


ஒரு பூவின்
மகரந்தத்தை
எடுத்து சென்று
இன்னொரு பூவின்
மகரந்தத்துடன்
சேர்த்து
சித்து விளையாட்டு
செய்து
ஏதேதோ உதவுகிறாய்...

எனக்கும் அவளுக்கும்
இடைவெளி
தொடர்கிறது
ஏதாவது
சித்து செய்து
சேர்த்து விடு
என்னோடு அவளை

பருவப்பார்வை

பருவ
மழைக்காககாத்திருக்கும்
பயிர்கள்போல்...

எனக்குள் தோன்றிய
உன் மீதான
காதல் செடியானது -உன்
பருவப்பார்வைக்காக காத்திருக்கின்றது...