Friday, February 18, 2011

உனக்குள் நானானாலன்றிமுதல் பார்வையில்
கண்கள் வழி உள்வாங்கி - உன்
கன்னி முகம்
காணா இருள்
கவிந்து கிடக்கும் - என்
இதயத்தின் இருட்டில்
வடிவமைதி பெற்று
இருப்பாகியது

நீயும் யாரும்
அறியாது
பதிந்து விட்ட
அந்த முகத்தின்
முழு விதானத்தில்
முடங்கிப்போனது
முற்றுமாய் என்
எண்ணப்போக்குகள்

என் தலையில்
நானே ஏறி
நிற்க முடியுமா ?
என்னுள் ஆன உன்னை
தேடலுக்கு
அவசியம் கொடுத்து
தேடினால் கிட்டுமா
முயற்கொம்பில்
தேனெடுக்கும் முயற்சி
ஆகிவிட்டது

உனக்குள் நானானாலன்றி
எனக்குள் இருக்கும்
உனதான நினைவுகள்
உறங்கு கால
விதையாய் என்றும்
முளையாப் பயிராய்
வளராது
செழிக்காது
செல்லரித்துப்போய்விடுவது
விதியாகிவிடும்..............

Thursday, April 15, 2010

பரிசு


அன்னை காட்டும்

அற்புதமான அன்பின்

அடையாளம் முத்தம் ........


இவ்வளவு பெறுமதி மிக்க

பரிசை கேட்காமலே அன்னை தருவாள்!

Wednesday, April 7, 2010

இலட்சியனின் கிறுக்கல்கள்: மாறாத மாற்றங்கள்

இலட்சியனின் கிறுக்கல்கள்: மாறாத மாற்றங்கள்

உனக்காய் ஓர் இருவரிகள் உரைக்காதிருந்தால் என் நா'வாய் இருக்காது...


வாழ்வில்
கரடு முரடுகள்
எங்கும் பரவி விரவி
மலிந்து கிடக்க
அதிலுலன்று பாடாய்
படும் வேதனை கண்டு
விரைந்து வருகிறாய் துணையாய் நீ - நம்பிக்கையே!!!

தேடித் தேடி
அலைகிறேன்
நிம்மதியை நாடி -நான்
வாடிவதங்கி நிற்கும் வேளைதனில்
ஓடி வருகிறாய் உற்ற தோழனாய் நீ
கோடி நன்றிகள் உனக்காய்
மேடாய் அடிக்கினும்
உந்தனக்கு ஈடாய் அமையாது
இவ்வுலகில் - நம்பிக்கைகே!!!

வெறுப்பாய் இருக்கும்
இருக்கவே இவ்வுலகில்
தொல்விகள் அவமானங்கள் கண்டு,
பொறுப்பா வாறேன்
நான் இருப்பாய் உன்னிடம்
இருக்கும் போது
ஏனப்பா வெறுப்பாய்
இருக்கிறாய் வாழ்வில்
என்று கேட்பாய் நீ - நம்பிக்கையே!!!

ஊரும் இல்லை
உறவும் இல்லை இங்கு
நீ மட்டும் என்றுமே என்னோடு
நம்பிக்கையே!!

உனக்காய் ஓர்
இருவரிகள்
உரைக்காதிருந்தால் என்
நா'வாய் இருக்காது
இருப்பாய் எனக்காய் என்று
விருப்பாய் இருக்க இவ்வாழ்வு என்றும் - நம்பிக்கையே!!!

Sunday, April 4, 2010

சாதனை நோக்கி நான் .........


நானறிய
ஏதும் தீதை
எவருக்கும் செய்ததில்லை
ஏன் எனக்கும் மட்டும் இப்படி ...
வாழ்வின் நல்
பாதையை தீர்மானிக்க
நினைக்கையில்
போதை ஏறியது போல
காலம் ஏன் எனை
காலைவாரி
காட்டிடை எறியவேண்டும் ?
தூர விழுந்தேன்
துணிவாய் காலடி வைத்தேன்
அங்கும் முரடாய் எல்லாம்
பரவாயில்லை என நடக்க
அழுக்காய் போனதே
அவ்வழியும் ...
இருந்தும் தூரே தெரிந்த
வெளிச்சத்தின் கீற்றில்
புதிதாய் ஒரு தேசம்
நோக்கி நேரே வந்து
நெடுநாட்களாகிவிட்டன...
காலம் தூக்கி
எறிந்துவிட்டதென்னை
இளமைக்கால அனுபவத்தை
இனிதாய் நுகரவிடவில்லை ...
அன்பையும் அரவணைப்பையும்
தூரத்தே வைத்து
முரட்டுக்கரங்களுக்குள்
இறுக்கிப்பிடித்து நான்
உறும் வேதனையை
காலச்சாணக்கியன் வேடிக்கை
பார்க்க வைக்கிறான்
விகடமாய் பல்லிளிக்கிறான் ...

அன்பும் அதில் கலந்த அணைப்பும்
பெறுவதில் பாடாய் போய்விட்டது!
இதை பெறுவதே
எனக்குள் நான் உருவாக்கிய
சாதனைப்புத்தகத்தில் புகுத்த
நினைக்கும் சாதனை ...
அச்சாதனை நோக்கி நான் ...................

க.ஜயதீ(இலட்சியன்)

Wednesday, December 30, 2009

ஒளிர்வாய் புகழாய்
Free Graphics - MySpace/Xanga/Friendster
தொல்லைகள் அகல
நல்லவை நீள
வல்லவை செய்க
உள்ளவை உணர்
உண்மையில் நில்
மெல்லென அமைதியுறு
வையென வை உன்னில்
நம்பிக்கை வை
செய்யென செய்
செயற்கரிய செயல் செய்
புல்லென இருக்காதே
வில்லென வளை
வில்லனை ஒளி
வெல்லென வெல்
பகையது வெல்
வரும் தடை அகற்று
வரும் ஆண்டை
செயலால் செப்பனிடு
ஒளிர்வாய் புகழாய்
ஒளிர்வாய்.

Sunday, December 6, 2009

விழியழகு....


நீள் வளையம்
அங்கங்கே வளைவு சுழிவு
அமைந்து அழகு கொடுக்கும்
அந்தக் கண்களுக்கு மட்டும்
அந்த பிரம்மன்
அச்சு வடிக்க
எத்தனை கலவை சேர்த்தான்
என்று எண்ணிப்பார்க்கவே
திகிலடைகிறது என்கண்கள் ...
நேர்த்தியுடன்
பூர்த்தியாய் பார்க்க
புண்ணியம் செய்திருக்கணும் கண்கள்...

ஒருதரம் அவை
சுற்றுகையில்
மயிலிரெண்டு தோகை
விரித்தாடுவதுபோல்
விழிகள் விரிய
அவற்றின் தோற்றம்
அழகுற தோன்றும் ...

காந்தத்திலும் ஒவ்வா ஏற்றமுண்டு
இந்த காந்த கண்களில்
இரு ஏற்றங்களும்
ஈர்க்கும் ஏற்றங்களாக,
பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும்
பார்வைகள் வர.
என்ன வித்தைகள் செய்து
இவை வார்க்கப்பட்டன
என்று எண்ணத்தோன்றுகிறது...

இவ்விழியழகை
பார்த்திட மட்டுமே
விடியும் பல
பகல்கள் வேண்டும்
அந்தகண்களோடு
இனிய கனவுகள்
எளிதாய் வந்திட
அமைதியான
இரவுகள் வேண்டும்...


வாழ்க்கை ஒரு
வட்டம் என்றும்
வாழ்ந்து முடித்த
சுகமதையும்
கண்ணின் கருவட்டவடிவம்
உணர்த்தியழகை
வார்த்தையில் வடிக்க
கிடைக்காது நேரம் ...

எண்ணிலடங்கா கண்கள்
கண்டேன்
அவை எண்ணிக்கையில்
விண்ணை முட்டும்
பெண்ணினிவள் கண்களுக்கு
ஈடாக இன்னும்
இரு விழிகள் கண்டிலேன்....

முற்றும்!

பிற்குறிப்பு:- கொஞ்சம் over தான்
என்ன பண்ற adjust பண்ணுங்க friends.
எனக்கு தேவை கவிதை உமக்கு தேவை ரசனை.

By.
K.Eலட்சியன்.

Wednesday, October 28, 2009

கன்னியும் காதலும்


இரவின் மொளனத்தில்
இனிய அமைதியை
களித்த இன்பத்தில்
உறக்க காலத்தினை
முடித்து ...
நிகரில்லா மகிழ்ச்சியில்
துள்ளிக்குதிக்கும்
மனவுள்ளத்தோடு
காலைக்கதிரவனின் கதிர்களை
கண்டு மொனத்தை
கலைத்து இரா மெல்ல செல்ல ...
மழைத்துளிகளை
தரையில் கொட்ட
துடிக்கும் கருமேகம் போல
பொறுத்து பொறுத்து
காத்திருந்து தாங்காமல்
மொட்டு சட்டென வெடித்து
மலராய் மலர
அதுவரை நேற்றின்
இனிய போதையில்
படுத்துறங்கிய சிறுவண்டுகள்
மொட்டு வெடிப்பின்
ஓசைகேட்க
இடியோசை கேட்ட
நாகமென திடிரென்று விழித்து
தேனை அருந்த
ஓடோடி வரும்
தேனீக்கள் போல ....
அன்பையும் அழகோடு கூடிய
அரவணைப்பையும் நாடிச் சென்றிட
துடிக்கிறது கன்னியின் உள்ளம்
அதைத்தான் காதல் என்கிறது
காலம் காலமாய் எழும்
காவியங்களும் ..............


By.K.Eலட்சியன்

Wednesday, August 19, 2009

சந்தேகம்

உலகிலாயிரம் கோடி
வாயில்வரா
நோய்கள் பல
இருந்தும் இதுவொன்றும்
புது நோயல்ல
எவரிடமும் எளிதில்
ஊடுருவி தாக்கவல்ல
தொற்றுக்கிருமி
சத்தம் இல்லாமல்
உள்ளே இருந்து
உயிரை உறிஞ்சும்
உயிர் கொல்லி

வறுமையிலும்
வாழலாம்
சிறுமையுள்ளும்
சீர்தூக்கலாம்
ஏன் எனில்
நிம்மதி அங்கிருக்கு
நிம்மதி கெடுத்து
அமைதி குலைத்து
அழிய வைக்கும்
சந்தேகம் வராவிட்டால்.

கணவன் மனைவி
மீது பாய
மனைவி கணவன்
மீது பாய
தூண்டி தூண்டி
மனக்கிளர்ச்சிகளை
உண்டுபண்ணி
ஈற்றில்
நீதிமன்ற வாசல்படி
ஏறவைத்து
இருவரையும்
எல்லோரும் இவர்களை
எள்ளி நகையாடி
வாயில் வருவது
பேச வைக்கிறது.

சந்தேகம் யாரையும்
விட்டு வைப்பதில்லை
தெய்வத்தை கூட
ராம பிரான்
உலகம் தப்பாய்
கதைக்கும் என
சீதா பிராட்டியில்
சந்தேகப்பட்டார்
பிராட்டியையும் இழந்தார்!

சந்தோசம் காண
சந்தேகம் விலக்கி
சந்ததி போற்ற
வாழ்வு மானிடமே"


By
K.ஜயதீசன்(இலட்சியன்)

Tuesday, August 18, 2009

பணத்தின் வெம்மையில் கருகிய காதல்

காதல் யாரைத்தான்
விட்டு வைத்தது
ஒவ்வொரு மனங்களிலும்
காதல் காற்று
லேசாய் தொட்டு
செல்ல மறுப்பதில்லை
அதனை பற்றிக்கொள்ளும்
மனங்களும் உண்டு
போனால் போகட்டும் போ என்று
விட்டுச் செல்லும் உள்ளங்களும் உண்டு!


கீதன், நிதா
என்கிற இரு உள்ளங்களை
தன்விரிந்த போர்வையால்
போர்த்திக்கொண்டு
விலக விடாமல்
மூடிக்கொள்கிறது காதல்
எல்லையில்லா காதல் வானிடை
இறக்கையின்றி பறக்கும்
அதிசயப் பறவைகளானார்கள்

நகமும் சதையும் போல
ஒருவரை ஒருவர்
இணைபிரியாது
இவர்கள் காதலில் மூழ்கினார்கள்
அதனால்
இடைவிடாது
தொடர்கிறது
காதல் யாத்திரை
கரடு முரடுகள்
மேடுபள்ளம்
வீதியிலும் வீதியோரத்திலும்
நதியிலும் நதியோரத்திலும்
எங்கும் செல்வோம்
எதிலும் நம்காதல் சொல்வோம்
என்று தொடர்ந்து
பயணிக்கிறது இவர்கள் காதல்பயணம்.


பரந்து விரிந்த
காதல் கடலிடை
நீச்சலடிக்கும்
ஜோடி மீன்களாய்
கீதனும், நிதாவும்

ஆனால்
இவர்கள்
குடும்பப்பின்னணி
வேறு விதமாக
அமைகிறது
அங்குதான் ஏற்றத்தாழ்வுகள்
புரையோடுகின்றன...
வெவ்வேறு
கோடுகளில்
அவர்கள் குடும்ப
சக்கரங்கள் சுழன்று
செல்கின்றன
பணத்தின் மேல்
படுக்கும் அளவிற்கு
கீதன் வாழ்கின்றான்
அன்றாடம் காச்சியாய்
இருக்கின்றாள்
நிதா

கீதன் நிதா
காதல் கதை
அவரவர்
குடும்ப முகவரியை
எட்ட
துள்ளிக்குதிக்கின்றார்
கனவான்
கீதனின் தகப்பன்


ஒரு வேளைக்
கஞ்சிக்கே வழியில்லா
பிச்சைக்கார......
என்று
இஞ்ஞனம்
பணத்திமிர்
வார்த்தைகளை
அள்ளி வீசுகிறது

நீ அவளை
இனி பார்க்க
போனாய் என்றால்
உனக்கு இங்கு
இனி இடமில்லை என்றும்

அதுமட்டுமன்றி
எங்களை உயிருடன்
பார்க்க முடியாது என்றும்
கடினமான பூட்டால்
அவனது காதல் கதவை
பூட்டி விட
செய்வதறியாது தவிர்க்கின்றான்.

பெற்றோர் மீது
கொண்ட பற்று எனும்
நெருப்பால் இவன் காதல்
எரிந்தது.
சீக்கிரமே
பணத்தால் உயர்ந்த
பெண்ணுக்கு இவன்
மாலையிடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

ஏழையின் வயிற்றில்
உதித்தது தப்பா ?
பணக்காரனை காதலித்தது தப்பா?
நிதா வேதனையில்
நொந்து வெந்து
நூலாகிறாள்
நீரில்லா குளத்தில்
நீச்சலடிக்க முனைந்த மீனாய்
இவள் கதை இவ்வாறு...

பணத்தின் வெம்மையில்
கருகிய காதலாய்
இவர்கள் காதல்
மாறியது!

Monday, August 17, 2009

Love

கனவில் காதலிக்கு உம்மா

ஏன்
இவ்வளவு
தாமதம் ...
என்று கண்ணன் சொல்ல


இன்று
பஸ் கொஞ்சம்
லேட்டாகிவிட்டது
ராதா பதிலளித்தாள்


அன்புக்கோபம்
காட்டினான்
கண்ணனவன்

அவளும் பதிலுக்கு
கோபிக்காதடா
கண்ணா
என் செல்லம் எலா நீ

ஐஸ் வைக்காத
என்னை
காக்க வைத்து விட்டு
என்றான் இவன்.

அப்படி இப்படி
என்று
கோபம் இருவருக்கு
அன்பாய் மாற
அவள் முதலில்
மெல்ல முத்தம் இட்டாள் கன்னத்தில்

ஐயா விடுவாரா
பதிலுக்கு
ஊ ஊ ஊ
உதட்டை நீட்டி
உம்மா கொடுக்க போனார்
அந்த சமயம்
அம்மா இவருக்கு ரீ கொண்டுவர
அண்ணார்ந்து படுத்திருந்து
கனவில் காதலிக்கு
உம்மா கொடுக்கும் இவரைப்பார்த்து
அம்மாவுக்கு கடுப்பு வர
சுடு ரீ யை உதட்டில் தெளித்துவிட
தம்பி கண்ணனுக்கு கனவு தெளிந்து
ஆய் என்று கத்தினார்....

By.
K.Eலட்சியன்